இந்திய ரிசர்வ் வங்கியானது எதிர் சுழற்சி மூலதன இடையகத்தின் செயல்படுத்துதலை ஒத்தி வைத்துள்ளது.
CCyB (countercyclical capital buffers) ஆனது பொருளாதாரத்தில் அதிகரித்து வரும் சுழற்சித் தொடர் அபாயங்களினால் ஏற்படும் இழப்புகளுக்கு எதிராக வங்கித் துறையைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த விதியானது முதன்முறையாக பேசல் – III என்ற விதிமுறைகளில் அறிமுகப் படுத்தப்பட்டது.
பேசல் – III என்பது உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகளினால் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு தன்னார்வ நடவடிக்கைகளின் தொகுப்பாகும்.
இந்த நடவடிக்கைகள் 2007 – 09 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலக் கட்டத்தில் நிகழ்ந்த நிதியியல் நெருக்கடிகளுக்கு எதிர்வினை ஆற்றும் விதமாக வங்கித் துறை ஒழுங்குமுறை குறித்த சர்வதேச வங்கித் தீர்வுகள் அமைப்பின் “பேசல் குழுவினால்” ஏற்படுத்தப் பட்டது. இது வங்கிகளின் ஒழுங்குமுறையை வலுப்படுத்துவதையும் நிதியியல் அமைப்பிற்குள் இருக்கும் பிரச்சினைகளை எதிர்த்துப் போராடுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.